ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வலுவான நியூசிலாந்தை வீழ்த்தியது. மார்ச் 2 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் விளையாடிய இந்தியா 250 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 79, ஹர்திக் பாண்டியா 45, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்தின் மார்ட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி, இந்தியாவின் சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியாமல் 45.3 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் போராடி 81 ரன்கள் எடுத்தார், ஆனால் இந்தியா வெற்றியைப் பறிக்க முக்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ்நாடு அணிக்காக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ-வில் உள்ள மூன்று போட்டிகளில் இந்தியா மூன்றில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், இரண்டு வெற்றிகளுடன் நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.
துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறினார். இருப்பினும், கடைசி ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயரும் பாண்ட்யாவும் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றதில் அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அடுத்த அரையிறுதிப் போட்டி குறித்து மிட்செல் சாண்ட்னர் கூறினார், “இந்தியா மிடில் ஓவர்களை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியது. ஷ்ரேயாஸ் நல்ல இன்னிங்ஸை விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக முடித்தார். பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது வெற்றிக்கு முக்கியமாகும்” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறினார், “நாங்கள் விளையாடிய ஆடுகளம் மெதுவாக இருந்தது. அங்குள்ள ஆடுகளம் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்டது. இதுபோன்ற சூழ்நிலையில், தென்னாப்பிரிக்காவில் நான்கு தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை எவ்வாறு கையாள்வார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.