நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது பிறந்தநாளில் 49, 50 மற்றும் 51-வது படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் ‘மன்மதன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம், அவருடன் வல்லவன், சிலம்பாட்டம், வானம், வாலு போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.