சென்னை : நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கில் சீமானுக்கு ஆதரவாக உத்தரவு வந்துள்ளதால் .இதுதான் கடைசி வீடியோ என நடிகை கதறலுடன் தெரிவித்துள்ளார்.
சீமான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது என் சார்பாக யாரும் ஆஜராகவில்லை என்று நடிகை விஜயலட்சுமி வேதனையுடன் கூறியுள்ளார்.
நான் காசுக்காக வரவில்லை, இவ்வழக்கில் எனக்கு எந்த நீதியும், நியாயமும் கிடைக்காது என்று தெரிந்து தான் வீடியோவில் அழுது, கதறினேன்.
இதுதான் என்னுடைய கடைசி வீடியோ. இனி போராட மாட்டேன். எனக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு கொடுத்த சம்பவத்தில் அவருக்கு சமன் அனுப்பி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.