அமெரிக்கா: அமெரிக்காவின் பிரபல நாட்டுப்புற பாடகியின் கணவர் காலமானார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாட்டுப்புற பாடகி டாலி பார்ட்டன். தன் கணவர் கார்ல் டீன் காலமானதாக அறிவித்துள்ள டாலி, ‘நானும் கார்லும் ஒன்றாக வாழ்ந்த ஆண்டுகள் அற்புதமானவை.
60 ஆண்டுகள் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்பை சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கார்லின் மறைவுக்கு உலகம் முழுவதும் திரை, கலையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.