வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் மூலம் பூமிக்கு பத்திரமாக திரும்புவேன் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (61) ஆகியோர் ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்க விமான உற்பத்தியாளரின் போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஜூன் 5 ஆம் தேதி இரவு 8.22 மணிக்கு இந்திய நேரப்படி வெற்றிகரமாக புறப்பட்டு ஜூன் 6 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
9 நாட்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஜூன் 22ஆம் தேதி பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள், வாயு கசிவு உள்ளிட்ட காரணங்களால் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், ‘போயிங் ஸ்பேஸ் ஷட்டில் எங்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும். நாங்கள் இங்கே சிக்கிக்கொண்டதாக நாங்கள் நினைக்கவில்லை. நமது சக விண்வெளி வீரர்களுக்கு உதவும் வாய்ப்பாக இதை பார்க்கிறோம்.