மும்பை: தனது காதலரை நடிகை தமன்னா பிரிய என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது.
அதற்கு பிறகு அவர்களே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து, ஜோடியாக வெளியில் சுற்றி வந்தார்கள்.
ஆனால் தற்போது அவர்கள் இருவரும் திடீரென பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்கிற தகவல் வெளி வந்திருக்கிறது.
நடிகை தமன்னா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்தாராம், ஆனால் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லை என்பதால் தான் இருவருக்கும் நடுவில் தொடர்ந்து பிரச்சனை வந்ததாகவும், அதுவே தற்போது பிரேக்கப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.