சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவனின் கோரிக்கையை நடிகர் ராகவா லாரன்ஸ் நிறைவேற்றியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குருக்கலையாபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் விஷ்ணு. 7-ம் வகுப்பு படிக்கும் இவர் தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் தனது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து எடுத்துக்கூறி, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை குருக்கலையாப்பட்டி கிராமத்தில் அமைத்து கொடுத்தார். இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று திறந்து வைத்தார். அந்த குடிநீரில் சமைத்த உணவையும் அவர் சாப்பிட்டு மகிழ்ந்தார்.