நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்க விரும்புகிறோம். இதுவரை படித்தவர்கள் அனைவரும் இருமொழிக் கல்வியில் படித்தவர்கள்.
மாணவர்கள் மீது ஏன் 3 மொழிகள் திணிக்கப்பட வேண்டும்? அவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கட்டும். இது கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் பணம் கொடுப்போம் என்று சொல்வது ‘பிளாக்மெயில்’. கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜாதி உடை அணிந்து நடனமாடிய விவகாரத்தில் ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். 2027-க்குள் 18,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜக நடத்தும் கையெழுத்து இயக்கத்தைப் பற்றி கேட்கிறீர்கள். ரயிலில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது போல், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து போட வைக்கிறது பாஜக. தமிழகக் குழந்தைகள் ‘நீட்’ வேண்டாம் என்கிறார்கள். அதைக்கேட்டு ‘நீட்’ தேர்வை எடுத்துவிட்டீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.