இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்பது தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றியவுடன், ரோஹித் சர்மா உடனடியாக டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார். தற்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் தலைமை தாங்கி வழி நடத்தி வரும் ரோஹித், இறுதிப் போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றுள்ளார். நிச்சயமாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், ஒருவேளை அவர் ஓய்வை அறிவிக்கவில்லை என்றால், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்காக மட்டுமே இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பேசிய கங்குலி, “ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது என்பதைப் பற்றி தற்போது பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த சில மாதங்களில் டி20 உலக கோப்பையை வென்ற பின், அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இப்போது அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், அவர் எவ்வாறு எதிர்காலத்தை முன்வைக்கும் என்பது தெரியவில்லை. எனினும், என் கருத்தின்படி, இந்திய அணி இறுதிப் போட்டி வென்றால், ரோஹித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்க அது சரியான தருணமாக இருக்கும்,” என்று கூறினார்.
கங்குலி மேலும் கூறியுள்ளார், “ரோஹித் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்துள்ளதால், அவர் முன்கூட்டியே ஓய்வு முடிவு பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இதனால், போட்டி முடிந்த பின்னர், அவர் தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு இருக்கலாம்.”
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், ரோஹித் சர்மா ஓய்வு பற்றிய முடிவை அறிவிப்பார் என்பதே பலரது கருத்து ஆகும்.