நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு கோடை சீசனில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு வண்ணங்கள் மற்றும் ரகங்களில் 5 லட்சம் நாற்றுகள் நடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் புதிய வரவு டாப்ஃபோடில் மலர்கள் தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அலங்கார தொட்டிகளுக்கு நடுவில் நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர்.