புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்ற பிப்ரவரி 3-ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘கங்கை-யமுனை நதிநீரின் பல இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக கோலிஃபார்ம் பாக்டீரியா உள்ளது.

அவை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் ஏற்றவை அல்ல’ என, கூறியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று சமாஜ்வாதி எம்.பி., ஆனந்த் பதவ்ரியா, காங்கிரஸ் எம்.பி., சுதாகரன் கேட்ட கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தில், பிப்ரவரி, 28-ல் சமர்ப்பித்த புதிய அறிக்கையில், மகா கும்பமேளாவின் போது, கங்கையில் நீராடுவதற்கு ஏற்றதாக இருந்தது.