சென்னை : இன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடந்து வருகிறது. இதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் புதியதாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதேபோல் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், “பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்” என கூறியுள்ளார்.