சென்னை: பட்ஜெட்டில் இதெல்லாம் இருக்குங்க… 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்.
ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன். ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம், தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.
நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி.