சென்னை: ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் பணி மேற்கொள்ள ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வங்கிக் கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை. 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க ஏற்பாடு. கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் ரூ.75 கோடி செயல்படுத்தப்படும். ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு பத்து இலட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.
கல்லூரி மாணவர்களுக்கு கணினி. மகளிர் தொழில் முனைவோர் 1 இலட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் போன்றவையும் இடம் பிடித்துள்ளது.