மும்பை: எனக்கு கொலை மிரட்டல் வந்தது என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட அவர், 2021 டி20 உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இதை சுட்டிக்காட்டி, தனக்கு இந்தியாவுக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சிலர் பைக்கில் தன்னை துரத்தியதாகவும் கூறியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி கூறிய இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.