சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலையில் லேசான மூடுபனி பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸாகவும் இருக்கலாம். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.