ஐதராபாத்: ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராஜாசிங். அவர் அடிக்கடி தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவார். பாஜக மேலிடம் அவரை கட்சியில் இருந்து சிறிது காலத்திற்கு நீக்கியது. அதன் பிறகு மன்னிப்பு கேட்டு மீண்டும் கடந்த தேர்தலில் சீட் கொடுத்தார். மேலும் பாஜக சார்பில் கோஷாமஹால் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ராஜாசிங் கூறியதாவது:- ரம்ஜான் நோன்பு காலத்தில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி பேசி வருகிறார். சமீபத்தில் கூட ஹோலி பண்டிகையின் போது பிரச்சனையை உண்டாக்கும் வகையில் பேசினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தவுடன், அசாதுதீன் ஒவைசி நாடு கடத்தப்படுவார்.

இல்லையெனில், கட்சித் தலைவர்களின் காலில் விழுந்து, பா.ஜ.,வில் சேரும்படி கெஞ்சினால் மட்டுமே, அவர் இந்தியாவில் இருப்பது குறித்து பரிசீலிக்கப்படும். சமீப காலமாக அசாதுதீன் மனவளர்ச்சி குன்றியவர் போல் பேசி வருகிறார். எனவே, அவரது நண்பரும், தெலுங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டி, அவரை நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ராஜாசிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.