சென்னை :ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வருமா? இதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் புனித மாதமாகிய ரம்ஜானில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஒரு மாத நோன்பிற்கு பிறகு பிறை தெரிந்ததும் உற்சாகமாக ரம்ஜானை கொண்டாடி மகிழ்வர்.
ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வரவும் வாய்ப்புள்ளதாம். 2030ம் ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களில் ரம்ஜான் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன், 1965, 1997 ஆகிய ஆண்டுகளில் 2 ரம்ஜான் கொண்டாடப்பட்டுள்ளதாம்.