சென்னை : உதவி லோகோ பைலட் தேர்வுகளுக்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து இருப்பது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உதவி லோகோ பைலட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது சாதாரண காரியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 19ஆம் தேதி உதவி லோகோ பைலட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.