வேலூர் : வேலூரில் பள்ளி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவியின் இந்த மரணம் அப்போது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே அரசு பல்வேறு விதத்திலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.