சென்னை : ஆர் ஜேபாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும்
சூர்யா 45′ படத்திற்கான இசையமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கவுள்ளனர்.படத்தின் இசையமைப்பு வேலைகள் தொடங்கியுள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபியங்கரும் ஆர்.ஜே பாலாஜியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.