சென்னை: பங்குனி மாத சுப தினமான இன்று துணை பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இன்று அதிக பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு துணைப் பதிவாளர் அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும்.

2 துணைப் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கப்படும். மேலும் ஆவணப் பதிவுகள் உள்ள 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும். மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட 4 தட்கல் 2-க்கு கூடுதலாக 1 டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.