சென்னை : நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஓஜி சம்பவம் ப்ரோமோ பாடலில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மிரட்டி உள்ளார்
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ‘ஓஜி சம்பவம்’ பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியானது.
ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரின் குரலில் பாடல் உருவாகியுள்ளது. இதனால் புரோமோ, பாடலின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாடல் நாளை மாலை 5.05 மணிக்கு வெளியாகிறது.
நடிகர் அஜித்தின் இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ரசிகர்கள் இந்த படம் அதிக அளவில் கவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்க காத்திருக்கின்றனர்.