சென்னை : தான் நடித்த கங்குவா படத்தால் வந்த நஷ்டத்தை சமாளிக்க தயாரிப்பாளருக்காக நடிகர் சூர்யா எடுத்த முடிவு என்ன என்று தெரியுங்களா?
நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த வருடம் நவம்பரில் ரிலீஸ் ஆனது கங்குவா. பாகுபலிக்கு இணையாக இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. படக்குழுவும் படத்தை அதிகம் பில்டப் செய்து ப்ரோமோஷன் செய்தது.
ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்களை திருப்திபடுத்தாத காரணத்தால் படம் பெரிய பிளாப் ஆனது. படத்தில் முதல் அரை மணி நேரம் மோசமாக தான் இருந்தது, அதற்காக நெகடிவ் ரிவியூ சொல்வீர்களா என சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவும் சமீபத்தில் காட்டமாக பேசி இருந்தார்.
இந்நிலையில் கங்குவா படத்தை தயாரித்து பெரிய அளவில் நஷ்டம் அடைந்த இருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்காக அடுத்து இரண்டு படங்கள் நடித்து கொடுக்க சூர்யா முடிவெடுத்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா ஏற்கனவே பல படங்கள் கைவசம் வைத்து இருக்கும் நிலையில் இந்த புது படங்கள் பற்றி தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.