சென்னை : முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார்.
அவர் படங்களின் மூலம் பாப்புலர் ஆனதை விட இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோக்களின் மூலமாக பிரபலம் ஆனது தான் அதிகம்.
மாளவிகா மோகனனின் அப்பா கே.யு.மோகனன் ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்திலேயே மாளவிகாவின் அம்மாவை ஹீரோயின் போல பிலிம் கேமரா மூலமாக அவர் போட்டோக்கள் எடுத்து இருக்கிறார்.
அதை எல்லாம் தற்போது பார்த்து தனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது என மாளவிகா தெரிவித்து இருக்கிறார்.