ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், வரி ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆகிய பதவிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தாசில்தார் ஆகிய பதவிகளுக்கான முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற்றது. இதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கான தேதி, நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்கென தனியாக அழைப்பு கடிதம் எதுவும் தபால் மூலம் அனுப்பப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.