டெல்லி: உத்தரப்பிரதேசம்-பிரயாக்ராஜ் மாநிலத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த நேரத்தில்; மகா கும்பமேளா கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது. மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்தி முடித்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உண்டு. அரசு, சமூகம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் பங்கு உள்ளது.
பகத்சிங் மற்றும் காந்தியைப் போலவே, மகா கும்பமேளா நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பகீரத மன்னன் கங்கா தேவியை பூமிக்குக் கொண்டுவர முயற்சி செய்ததை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதேபோல, இந்த மகா கும்பமேளாவில் ஒரு பகீரத முயற்சியைக் கண்டோம். மகா கும்பமேளா என்பது பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய ஆர்வத்தின் அடையாளமாக இருந்தது.

கடந்த ஆண்டு, ஆயிரம் ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இந்த கும்பமேளா அடுத்த தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையும். மகா கும்பமேளா விழா சுமார் ஒன்றரை மாதங்கள் கொண்டாடப்பட்டது. மொரீஷியஸ் சென்றபோது, திரிவேணி சங்கமத்தில் சேகரிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்றேன்.
மொரிஷியஸில் உள்ள கங்கா தலால் நதிக்கு புனித நீரை வழங்கினேன், என்றார். மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் குறித்தும், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.