சென்னை : திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்த பக்தர் ஓம் குமாரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். மேலும் கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவர் அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பயிலக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்கிறது.
அவ்வாறு திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற ஓம் குமார், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார். இது மற்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.