மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கலவரம் வெடித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹலால், அவுரங்கசீப் கல்லறை ஆகிய பிரச்சினைகளால் மகாராஷ்டிரா பற்றி எரிகிறது.
மகாராஷ்டிராவில் ஹலால் இறைச்சி, ஜத்கா இறைச்சி ஆகிய 2 முறைகளை வைத்து கடந்த சில மாதங்களாக விவாதம் நடக்கிறது. இந்நிலையில் அவுரங்கசீப்பின் கல்லறையை வைத்து மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அக்கல்லறையை அப்புறப்படுத்தக்கோரி இந்து அமைப்புகள் நாக்பூரில் நேற்று நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.