அவனியாபுரம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 2006-ம் ஆண்டு தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறோம்.

தற்போது போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் கைது செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கடந்த ஆட்சியிலும் கைது செய்யப்படுவது காலங்காலமாக இருந்து வருகிறது.
பட்ஜெட்டை தேமுதிக புகழ்ந்து பேசுவது 2026 தேர்தல் கூட்டணியின் முன்னோட்டமாக பார்க்கப்படுமா என்ற கேள்விக்கு, “தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்” என்றார்.