ரயில் பயணத்தின் போது தொந்தரவா? என்ன செய்யணும்?
சென்னை: ரயில் பயணத்தின் போது உங்களுக்கு ஏதாவது தொந்தரவா ஏற்பட்டால் புகார் அளிக்க என்ன செய்யணும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ரயில் பயணத்தின் போது பயணிகள் இடையூறு அல்லது தொந்தரவை சந்தித்தால் அது குறித்து புகார் அளிக்க ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே போலீசாருக்கு 182 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
ரயில்வே உதவி எண்கள் ஆனா 138 அல்லது 25354457 அல்லது 25354405 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அப்போது ரயில் விவரம் மற்றும் அடுத்து வரவுள்ள ரயில் நிலைய பெயரை குறிப்பிட வேண்டும். இதன் மீது ரயில்வே சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.