சென்னை : அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் சென்னை உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வடமாநிலங்களில்தான் ரயில் நிலையங்கள் மோசமாக இருக்கும் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையம் இருப்பது சென்னையில் தானாம்.
தூய்மை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் அசுத்தமான ரயில் நிலையமாக பெருங்களத்தூர் தேர்வாகியுள்ளது. அதன் பிறகே, ஷாகஞ்ச்( உ.பி. ), சதார் பஜார்(டெல்லி ) ஒட்டப்பாலம் (கேரளா) உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகவல் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுத்தமான சென்னை என்று அரசியல்வாதிகள் கூறிவரும் நிலையில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் அசுத்தமான ரயில் நிலையமாக தேர்வாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெருங்களத்தூர், ரயில் நிலையம், அசுத்தம், முதலிடம், பட்டியல், Chennai, Perungalthur, Railway Station, Unclean, TIMed, List