இந்தியாவில் எச்எம்டி ஏரோவ் குறித்து சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஃபின்னிஷ் பிராண்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த பெயரின் கீழ் டிவைஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இப்போது, இந்த போன் ஆனது வேறு பெயரில் வெளியிடப்படும் என்று HMD அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அதாவது இதுவரை நோக்கியா என்ற பெயரில் அறிமுகம் செய்துவந்த எச்எம்டி நிறுவனம், இனிமேல் எச்எம்டி பெயரில் ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட 6.65-இன்ச் HD+ (720×1,612 பிக்சல்கள்) LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது ஆக்டோ-கோர் 12nm யுனிசாக் T606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பேக் கேமரா மற்றும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8 மெகாபிக்சல் ஃபிராண்ட் கேமரா கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் சைடு- மௌண்பேட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. மேலும், இதில் 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி இன்- புல்டு ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி நிறுவனம். எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த விலையானது CMF Phone 1, Moto G85 5G, Lava Blaze X மற்றும் OnePlus Nord CE 4 Lite போன்ற பிரபலமான மாடல்களுக்கு எதிராக இந்த புதிய HMD ஃபோனை நிலைநிறுத்துகிறது. சிறந்த கேமரா வசதி, மேம்படுத்தப்பட்ட சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய எச்எம்டி போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெளியீட்டு விழாவிற்கு மிக குறைந்த நாளே இருப்பதால், இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.