போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வெளிநாட்டினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவின் தெற்கு அந்தமான் பகுதியில் உள்ள தர்முக்லி தீவிற்கு அருகிலுள்ள ஏராளமான பழங்குடியினர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வெளிநாட்டினர்களும் பிறரையும் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், 24 வயதான அமெரிக்கர் மைகைலோ விக்டோர்விச் போலியாகாவ், கடந்த மாதம் 27-ஆம் தேதி போர்ட்பிளேயருக்கு வந்தார். அங்கு உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர், மார்ச் 29-ஆம் தேதி அதிகாலையில் ஒற்றை இருக்கைகொண்ட ரப்பர் படகில் குரமந்தே தீவுக்கு சென்று கொண்டிருந்தார்.
பழங்குடியினர்கள் அவர் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் விரைந்து அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் டி.ஜி.பி., தாலிவால் கூறியதாவது, “அமெரிக்கர் போலியோகாவ் பழங்குடியினர் பகுதிக்கு அத்துமீறி சென்றது ஏன் என்று விசாரிக்கப்படுகிறது. அவர் போர்ட்பிளேயரில் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.”
இந்த தீவுக்கு அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இரு முறை பயணம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.