பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடந்தது. அதன் பிறகு, பிப்ரவரி 1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இரண்டாவது அமர்வு மார்ச் 10ம் தேதி துவங்கியது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்து அமளியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றபோது, பார்லி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவை சபாநாயகர் ஓம் பிர்லா, எந்த குறிப்பிட்ட தேதி கூறாமல் ஒத்திவைக்க உத்தரவிட்டார்.