சென்னை: புடலங்காய் ஓர் அற்புதமான சத்துள்ள உணவு. எனவே கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். புடலங்காயை கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும். புடலங்காய் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று. புடலங்காயை ஆண்களுக்கு அவசியமான ஒன்றாக முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணமும் உண்டு. இந்த காய் ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது.
வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். குடல் புண்ணை ஆற்றும்.