ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ அணி மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் லக்னோ அணி 4 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பெற்றது. மும்பை அணி, 4 போட்டிகளில் மூன்றாவது தோல்வியை சந்தித்து பின்னடைவை அனுபவிக்கின்றது. இந்த போட்டியில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் திக்வேஷ் சிங் ரதி. அவர் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்த அவர், துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவை விரட்டினார். ஆனால், ஆர்யா விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி செல்லும்போது திக்வேஷ் சிங் ரதி அவரை நோக்கி ஓடி வந்து “வெளியே போ” என்ற வகையில் கொண்டாடினார். இது ஐபிஎல் 2.5 விதிமுறையை மீறியதாக பரிசோதனைக்கு உட்பட்டு, பிசிசிஐ 25% சம்பளத்தை அபராதமாக விதித்து, ஒரு கருப்புப் புள்ளியும் தண்டனையாக வழங்கியது.
இந்தப் போட்டியிலும் மும்பை வீரர் நமன் திர் விக்கெட்டை எடுத்த பிறகு, திக்வேஷ் மீண்டும் அதே போல கொண்டாடினார். ஆனால், இந்த முறையில் அவர் பேட்ஸ்மேனுக்கு அருகே சென்று கொண்டாடாமல், தனது இடத்தில் இருந்து “வெளியே போ” என்ற வகையில் கொண்டாடினார். இதன் காரணமாக பிசிசிஐ 2.5 விதிமுறையை மீறியதாக அறிவித்துள்ளது.
பிசிசிஐ, அதற்கான தண்டனையாக, திக்வேஷின் 50% சம்பளத்தை அபராதமாக விதித்து, ஒரு கருப்புப் புள்ளி வழங்கியுள்ளது. இந்த கருப்புப் புள்ளியின் எண்ணிக்கை 5-ஐ தாண்டினால், அவர் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை பெறுவார்.