மும்பை: கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நாளை ரிலீஸ் ஆக இருந்த புலே திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாதிய பாகுபாட்டிற்கு எதிராக போராடிய ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘புலே’ என்ற ஹிந்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் தங்கள் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பிராமண சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாளை வெளியாக இருந்த இப்படம், 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல காட்சிகளை நீக்குமாறு சென்சார் போர்டும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்த படம் மேலும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என விபரம் முடிந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு, புலே படம், காட்சிகள், சென்சார் போர்டு, தள்ளிப் போகிறது