மலையாள சினிமா உலகில் இருந்துதான் தற்போது தென்னிந்திய சினிமாவுக்கு வரிசையாக ஹீரோயின்கள் வருகிறார்கள். வாத்தி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சம்யுக்தா. தன் பெயருக்குப் பிறகு மேனன் என்ற சாதிப் பெயரை நீக்கியதாக அவர் கூறியது பலரது பாராட்டுகளைப் பெற்றது.
இதுபற்றி அவர் கூறும்போது, “வாத்தி படத்தில் இருந்து அந்த பெயர் இருக்காது. சாதியை குறிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் ஒருமித்த கருத்து இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தால் போதும்.” வாத்தி படத்திற்குப் பிறகு அவர் தமிழில் இன்னும் நடிக்கவில்லை.
அவர் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத நிலையில், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதனால்தான் அவர் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சம்யுக்தா தரப்பு எந்த பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.