நடிகை அபிநயா நேற்று தனது காதலர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த இனிய நிகழ்வின் புகைப்படங்களை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன, மற்றும் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு, சசிகுமார் நடித்த சமுத்திரக்கனி இயக்கிய “நாடோடிகள்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான அபிநயா, அதன் பின்னர் “ஈசன்”, “ஏழாம் அறிவு”, “வீரம்”, “தனி ஒருவன்”, “தடையற காக்க”, “குற்றம் 23”, “நிசப்தம்”, “விழித்திரு” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அபிநயா மற்றும் கார்த்திக் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இன்று பகிரப்பட்ட திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்களும் திரையுலக தோழர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.