பிஜப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கெரா கூறுகையில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.

அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் சந்திக்கிறார். இதற்குப் பிறகு, அவர் பிரவுன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.