புதுடெல்லி: யுனெஸ்கோவின் மெமரி ஆஃப் தி வேர்ல்ட் ரிஜிஸ்டரில் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் இடம் பெற்றிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் செழுமையான கலாச்சாரத்திற்கான உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனியின் நாட்டிய சாஸ்திரம் யுனெஸ்கோவின் உலகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
இந்த அறிவிப்பு, நாட்டுக்கு குறிப்பிடத்தக்க தருணம். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் இது பெருமைக்குரிய தருணம். யுனெஸ்கோவின் மெமரி ஆஃப் தி வேர்ல்ட் பதிவேட்டில் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் இடம் பெற்றிருப்பது, நமது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் செழுமையான கலாச்சாரத்தின் உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் கூறினார்.