சென்னை: மறுமலர்ச்சி தி.மு.க.வை, 1994-ல் துவக்கினார் வைகோ. அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள வைகோவின் மகன் துரை வைகோ, ஆரம்ப காலத்தில் அரசியலில் ஈடுபடாமல், பொதுப்பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். கட்சிக்காரர்களின் விருப்பத்தால் கட்சியில் இணைந்த துரை வைகோ ஒரு சாதாரண தொண்டர். பின்னர், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ம.தி.மு.க-வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். இதனிடையே, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக துரை வைகோ ஆதரவாளர்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர். இதையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இந்த விவகாரத்தில் தலையிட்டு, அப்படி எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்றும், இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அதன்படி இன்று ம.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் துரை வைகோ நேற்று திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது ம.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ம.தி.மு.க துணைத்தலைவர் மல்லை சத்யா, நான் வைகோவின் சேனாதிபதி.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் திராவிட இயக்கப் போராளி; தலைவர் வைகோவின் படைத் தளபதி என்பதன் அடையாளம், எனது மோதிர விரலில் தலைவர் வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டைப் பையில் அவரது புகைப்படம். இதுவே எனது அடையாளம். அனைவருக்கும் இதயம் நிறைந்த ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். எப்போதும் மறுமலர்ச்சிப் பாதையில் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.