சென்னை: நட்டி, பூனம் பஜ்வா நடிப்பில் ‘குருமூர்த்தி’ படத்தை இயக்கிய கே.பி. தனசேகர், அடுத்ததாக ‘பூங்கா’ படத்தை இயக்கவுள்ளார். ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அகமது விக்கி இசையமைக்கிறார். கே.பி. தனசேகர், பூங்கா ஆர் ராமுலட்சுமி, கீதாஞ்சலி லெனினியா செல்வன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
புதுமுகங்கள் கவுசிக் கதாநாயகனாக நடிக்க, ஆரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்ரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார் ஆகியோரும் துணை வேடங்களில் நடிக்கின்றனர். “பல்வேறு மக்களின் சங்கமமான ‘பூங்கா’ வெறும் பொழுதுபோக்கல்ல.

இது பூமியில் சொர்க்கம். நான்கு பேர் தங்கள் சொந்த பிரச்சனைகளுடன் பூங்காவிற்கு வருகிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் அங்கு எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதுதான் கதை,” என்றார் இயக்குனர்.