By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
    உடல்கள் குவிந்ததால் திணறும் நேபாளம்: இறந்தவர்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
    1 Min Read
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நோக்கி மோடி பயணம்: எரிசக்தி முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    நேபாளத்துக்கு இந்தியாவின் நிவாரண கரம்: 10 டன் பேரிடர் உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம்
    1 Min Read
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “என்னைப் பற்றியும் லாட்டரி தொழில் பற்றியும் பேசாதீர்கள்” – ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது?
    1 Min Read
    ஆவணி சுபமுகூர்த்த நாள்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் – பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
    1 Min Read
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைக்க என்ன செய்யணும்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைக்க என்ன செய்யணும்!!!
ஆன்மீகம்

வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைக்க என்ன செய்யணும்!!!

Nagaraj
Last updated: August 31, 2026 7:23 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி பூஜைகள் செய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியம்.

தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்வோம். சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும்.

பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும் அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது. நம்மில் பெரும்பாலானோர் தினமும் பூஜை அறையில் இறைவனை வழிபட்டாலும்கூட, வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி பூஜைகள் செய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியம். வீடுகளில் எப்படி பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் என்ன என்பது பற்றி சாஸ்திர நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

கடவுளை அனைத்து இடங்களிலும் வழிபடலாம் என்றாலும் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும். ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம்.

பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்கவேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வ சாந்நித்யத்தைக் குறைத்துவிடும். வீடானது கிழக்கு தாழ்ந்து, தெற்கும் மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக நம் ஊரில் காற்றோட்டத் திசையானது கிழக்கு மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால் காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இந்தக் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும்.

இந்தக் காற்றோட்டத்துக்குத் தகுந்த மாதிரிதான் வீடுகளின் அமைப்பு இருக்க வேண்டும். வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால் வீசும் காற்றில் பூஜை அறையின் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, வீடு முழுவதையும் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகச் செய்துவிடும்” என்று தெரிவித்தார். நாம் வசிக்கும் இல்லங்களில் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருப்பதன் சிறப்பு, பூஜை அறையானது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பூஜை அறையில் சூரிய உதயத்தின்போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்ய வேண்டும். காலையில் அன்னம், பால் படைப்பது நல்லது. மாலையில் விளக்கு ஏற்றி பழங்கள் படைப்பது சிறப்பு. பூஜை அறையில் இருக்கும் விக்கிரகமானது குடும்பத் தலைவரின் கட்டை விரல் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆகாது. ஏனெனில், அந்த விக்கிரகத்தின் சக்தியை குடும்பத்தில் வசிப்பவர்களால் தாங்க முடியாது.

பூஜை அறையில் சாளகிராமம் வைத்து வழிபடலாம். சாளகிராமம் என்பது நேபாளத்திலிருக்கும் கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வகை கல். வஜ்ரம் என்ற வண்டு துளைத்து சக்கரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும். இந்தச் சக்கரம் விஷ்ணுவின் அம்சமாகப் பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் அதை வைத்தும் வழிபடலாம். பூஜை அறை விக்கிரகத்தையும் சாளகிராமத்தையும் பெண்கள் தொடக்கூடாது. மற்றபடி அனைத்து வகையான பூஜைகளையும் செய்யலாம். பூஜை அறைக்குள் முன்னோர்களின் படங்கள் இருக்கக்கூடாது.

பூஜை அறையில் குலதெய்வங்களின் படங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். சிலர், சில குறிப்பிட்ட சுவாமிப் படங்களை வைத்து வழிபடக் கூடாது என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. புனிதமான இடத்தில் அனைத்து வகையான தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபடலாம். எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.

You Might Also Like

தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

பணக்கஷ்டம், மன கஷ்டத்தை போக்கும் வல்லமை கொண்ட துளசி

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பிரார்த்தனை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்

முக்கியத்துவம் நிறைந்த நன்மை பயக்கும் தானங்கள்

கொள்ளைக் கொள்ளும் சின்ன கண்ணனின் அழகை உயர்த்தும் மயில் இறகு!!!

TAGGED:Holy PlaceImagespooja roomrelicsVastuகுலதெய்வங்கள்படங்கள்புனிதமான இடம்பூஜை அறைவாஸ்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?