திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு உடனடியாக முன்பதிவு செய்யும் பக்தர்கள், ஆதார் அடையாள அட்டை நகலை தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையில் மண்டல் கால ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வெந்நீர், சுக்கு வெந்நீர், பிஸ்கட் வழங்கப்படுகிறது. உடனடி கவுன்டர்கள் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், 10 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைனில் தரிசனம் செய்யலாம். உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். முன்பதிவு செய்யும் போது பக்தர்களின் புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கப்படும்.
மண்டல் மற்றும் மகரவிளக்கு காலங்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டாலும் காப்பீடு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.