திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சென்றால் மட்டுமே யோகம் அடிக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. என்னதான் வழிபாட்டு தலங்கள் இருந்தாலும் நமது ராசிக்கு ஏற்ற தெய்வங்களைத்தான் வணங்க வேண்டும் என்கிறார்கள்.
இறைவழிபாட்டிற்கும் நமது ராசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கோயிலோ அல்லது பல ராசிகளுக்கு ஒரே கோயிலோ இருக்கும். இவற்றை அறிந்து நாம் சென்று வந்தால் சரியாக இருக்கும்.
அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் செல்லலாம் என்பதை பார்க்கலாம். எத்தனையோ முருகர் கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது வாழ்க்கையில் எல்லா விதமான ஏற்றங்களையும் பெற முடியும். ஏனென்றால் கோயிலில் உள்ள முருகனே குருவாக இருந்து அருள் பாலிக்கிறார்.
நவக்கிரகங்களில் குரு பகவான் மட்டுமே சுப கிரகமாக இருக்கிறார். சூரபத்மனை வதம் செய்ய முருகனுக்கு தேவர்களின் குருவான குரு பகவான்தான் பல்வேறு யுத்திகளை சொல்கிறார். எனவே அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக முருகனுக்கு நிகரான அனைத்து மரியாதைகளும் குரு பகவானுக்கும் உண்டு என்றே முருகன் அருள்புரிந்தார். அதுமட்டுமின்றி அங்கு குருபகவானாகவே காட்சியளிக்கிறார். இதுவே இந்த கோயிலின் சிறப்பாகும். குரு பார்க்கின் கோடி நன்மை என பழமொழி உண்டு. அதன்படி முருகனே குரு பகவானாக இருப்பதால் இந்த ஸ்தலத்தில் பெருமைகளை பற்றி கூறி கொண்டே போகலாம்.
அது போல் இங்கு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே வழிபடும் போது அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை பெறலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. பக்தர்கள் பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து கோடீஸ்வர யோகத்தை பெறுவர். மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம். இதன் மூலம் அவர்களுடைய வாழ்வில் அவர்களே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாறும். அது அவர்களின் பிறந்த நட்சத்திரத்தன்று அந்த கோயிலுக்கு சென்றால் அதன் பலன் அதிகமாக இருக்கும். அதிலும் தனுசு ராசிக்காரர்களின் ஆதிக்க தெய்வம் குரு என்பதால் இவர்களும் திருச்செந்தூர் செல்லலாம். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் எல்லாம் திருச்செந்தூருக்கு செல்லக் கூடாதா, இத்தனை நாள்களாக மற்ற ராசிக்காரர்களே செல்லவில்லையா என்ற கேள்வி வரும். அதாவது குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சென்றால் நல்லதொரு பலனை கிடைக்கும்.
திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவற்றில் 5 கோயில்கள் மலையின் மேல் இருக்கிறது. இந்த திருச்செந்தூர் ஆலயம் சூரபத்மாவை அழித்ததால் ஏற்பட்டது என்கிறார்கள். இங்குள்ள முருகன் உணவாக சர்க்கரை பொங்கல், கற்கண்டு, தினைமாவு, வடை, அப்பம், பருப்புக் கஞ்சி, தோசை, தேன், அதிரசம் சுய்யன் ஆகியவை படைக்கப்படுகின்றன. பால் மற்றும் சுக்கு வெந்நீர் வைத்து இரவு நேரத்தில் பூஜை செய்து வணங்குகிறார்கள்.