திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை திருவிழா, டிச., 1-ல் துவங்குகிறது.
டிசம்பர் 10-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை தீபம், டிச.13-ல் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில், பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள, பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.
கோவில் நடை திறக்கப்பட்டு, உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சந்நிதி முன் உள்ள பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராஜகோபுரம் முன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பந்தக்கால்களை நட்டனர்.
பின்னர் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.