திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது.
அடுத்து தீபத்திருவிழாவுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. திருவிழாவின் போது, தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 13-ம் தேதி 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். அன்று மாலை 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வரும் 23-ம் தேதி பந்தக்கல் முகூர்த்தம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ன்று காலை 5.45 மணி முதல் 7 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். தொடர்ந்து, அண்ணாமலையார் கோவில் மூன்றாவது பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் பராமரிப்பு, கோவில் பிரகாரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.