திண்டுக்கல்: பழனியில் பஞ்சாமிர்த டப்பாக்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3-வது அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதுதவிர கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் 20 ஆயிரம் பஞ்சாமிர்த கேன்கள் விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் தினமும் 1.50 லட்சம் கேன்கள் வரை விற்பனையாகிறது. பழனி கோயில் பஞ்சாமிர்தம் தமிழ்நாட்டில் கோயில் பிரசாதங்களுக்கு புவிசார் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாமிர்தத்தின் தரத்தை அறிய தேவஸ்தானம் முடிவு செய்து, பஞ்சாமிர்தத்தின் மாதிரியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (fssai) அங்கீகரிக்கப்பட்ட தனியார் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பியது.
வெவ்வேறு நாட்களில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆய்வின் மூலம் பழநி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமானதாகவும், 50 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பக்தர்களுக்கு விற்கப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தின் காலாவதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி, காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது.